இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியர்களை நாடு கடத்த முற்படுவது பாரிய குற்றமாகும்
இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியர்களை நாடு கடத்த முற்படுவது பாரிய குற்றமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (08) இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” ரோஹிங்கியர்களுக்கு அவர்கள் வாழும் நாட்டில் நடக்கும் சித்திரவதைகள் முழு உலகமும் அறியும். சிறு பிள்ளைகள் சகிதம் வந்துள்ள அவர்களை, நாடு கடத்த முற்படுவது பாரிய குற்றமாகும்.
எனவே, அதே நாட்டுக்கு அவர்களை அனுப்பாது, வேறு நாடுகளுக்கு அனுப்புவதற்கு ஐநா ஊடக உதவிகளை பெறுவதே ஏற்புடைய நடவடிக்கையாகும். இதற்கு முன்னரும் அவ்வாறு நடந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்..