வாழைச்சேனையில் விசேட சுற்றிவளைப்பு ; நால்வர் கைது

வாழைச்சேனையில் விசேட சுற்றிவளைப்பு ; நால்வர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 போதை மாத்திரைகள், 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஓட்டமாவடி பிரதேச பெண்கள் பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் 32 வயதுடைய ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய மூவரும் 15 வயது மற்றும் 30, 31 வயதுடையவர்கள் என்பதுடன், நால்வரும் ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப்பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )