9 குழந்தைகளை பெற்ற பெண்ணின்  வினோத ஆசை

9 குழந்தைகளை பெற்ற பெண்ணின் வினோத ஆசை

சீனாவை சேர்ந்த தம்பதிக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மேலும் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனாவை சேர்ந்தவர் தியான். 2008-ம் ஆண்டு தொழிலதிபரான ஜவோவை சந்தித்து 2010-ல் திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்பட தற்போது வரை 9 குழந்தைகள் பிறந்துள்ளது. உடல் பலவீனம் காரணமாக குழந்தை பெறுவதை தள்ளி வைத்துள்ளநிலையில் அந்த தம்பதி மேலும் 4 குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகிறார்கள்.

இதுகுறித்து தியான் கூறுகையில், என் குழந்தைகளில் 2 பேர் ஒரே ராசிக்காரர்கள், மீதமுள்ள 7 பேர் வெவ்வேறு ராசிகளை கொண்டவர்கள். எனவே சீன சாஸ்திரத்தின்படி 12 ராசிகளை குறிக்கும் வகையில் மேலும் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்வேன் என்றார்.

மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில் தம்பதியின் இந்த வினோத ஆசை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வலைத்தள வாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )