குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி
கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம், கனடாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் அதிக அளவு குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்த மாகாணமாக பிரிட்டிஷ் கொலம்பியா கருதப்படுகின்றது.
கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகில் குழந்தை பிறப்பு வீதம் குறைந்த நாடுகளின் வரிசையில் கனடா இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியா, ஸ்பெயின், இத்தாலிமற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இந்த வரிசையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார காரணிகளினால் இவ்வாறு குழந்தை பிறப்பு தொடர்பில் இளம் தலைமுறையினர் கூடுதல் சவால்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.