அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி 14 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்தும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த விஜயத்தில் இலங்கைக்கு சீனா ஆற்றிவரும் நன்மைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களிலும் சந்திப்புக்களிலும் கலந்துகொள்வார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.