அட்லாண்டிக் கடலில் 89 சடலங்கள் மீட்பு
அட்லாண்டிக் கடலில் மூழ்கிய படகு ஒன்றில் இருந்து தஞ்சக்கோரிக்கையாளர்களின் 89 சடலங்களை மொரித்தானிய நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
மீன்பிடிப் படகு ஒன்றில் கடந்த வாரம் செனகல் மற்றும் காம்பிய எல்லையில் இருந்து 170 பேருடன் இந்தப் படகு புறப்பட்டதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் படகு மொரித்தானியாவின் தென் மேற்கு கடற்கரைக்கு
அப்பால் மூழ்கியுள்ளது.
மேற்கு ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் குடியேறிகளுக்கான முக்கிய பயணப்பாதை ஒன்றாக மொரித்தானியா உள்ளது.
இந்த அபாயகரமான பாதை வழியாக பொரும்பாலானோர் ஸ்பெயினின் கனரி தீவுகளை அடைகின்றனர்.
கடந்த ஆண்டு இங்கு சுமார் 40,000 பேர் வந்ததாக ஸ்பெயின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கடல் வழியாக ஸ்பெயினை அடைய முயன்ற 5,000க்கும் அதிகமான தஞ்சக்கோரிக்கையாளர்கள் உயிரிழந்திருப்பதாக கமினன்டோ பென்ட ரஸ் என்ற தொண்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது