ஓநாய் – நாய் இணைந்து உருவான கலப்பின விலங்கு : இதனால் ஏற்படப்போகும் விளைவுகள் !
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஓநாய் மற்றும் நாய் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமான விலங்குகள் காணப்படுவதாகவும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் புனே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இந்த விசித்திர விலங்குள் நடமாடுவதாகவும்
தகவல்கள் வெளியாகியுள்ளன
பார்ப்பதற்கு ஓநாயை போலவே இருந்தாலும் ஆராய்ச்சியில் இது ஒரு கலப்பின விலங்காக உருவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கலப்பின விலங்கால் ஓநாய் இனத்திற்கே பெரும் ஆபத்து நேரலாம் என உயிரின ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை ஓநாயை போலவும் இல்லை நாய்களை போலவும் இல்லை என வியந்த வன உயிரியல் ஆர்வலர்கள், வினோதமான இந்த விலங்கின் முடி மற்றும் மலத்தை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
அதில், இந்த வினோத விலங்கு நாய் மற்றும் ஓநாய் ஆகியவற்றின் கலப்பினத்திலிருந்து உருவான ஒரு கலப்பின விலங்கு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விலங்கு ஓநாய்-நாய்கள் (wolfdogs) என்று அழைக்கப்படுகின்றன.
நாய்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான இனக்கலப்பு பற்றி சர்வதேச அளவில் ஆய்வுகள் நடக்கிறது.
இருந்தாலும் இந்தியாவில் இத்தகைய ஆதாரங்கள் முதல் முறையாக இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த ஓநாய்-நாய் கலப்பின விலங்கால் என்ன மாதிரியான ஆபத்து என நினைக்கலாம்.
இந்த கலப்பின விலங்கால் ஓநாய் இனத்திற்கே ஆபத்து வரலாம் என்பதுதான் வன ஆர்வலர்களின் கருத்து.
அதாவது, இந்த கலப்பின விலங்கு தனது இனத்தை பெருக்கும். வனப்பகுதிகளில் இந்த கலப்பினங்கள் உருவாவது மிகவும் ஆபத்து என்கிறார்கள்.
ஏனெனில், ஓநாய் இனத்திற்கு பெரும் ஆபத்து என்பதோடு அவற்றின் தனித்துவம் மரபணு அடையாளம் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஏனெனில் அதிக எண்ணிக்கையில் உள்ள நாய்கள், குறைவான எண்ணிக்கையில் உள்ள ஓநாய்களுடன் கலப்பினம் செய்தால் ஓநாய்களின் மரபணு பண்புகள் அழிந்து போகும்.
இது காலப்போக்கில் ஓநாய் இனமே அழிந்து போகும்.
இதனால் ஓநாய் இனங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வன உயிரிய ஆர்வலர்கள், அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக உள்ள புலிகளை பாதுகாப்பது போல ஓநாய்களை பாதுக்க முடியாது எனவும் ஏனெனில் ஓநாய்களுக்கு தனியாக சரணாலயங்களை உருவாக்குவது கடினம்.
னென்றால், ஓநாய்கள் மாறுபட்ட நிலப்பகுதியில் வாழும் விலங்கு. இவை வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடுகின்றன. எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஓநாய்களை பாதுகாப்பது பற்றிய நடவடிக்கையை எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள் .
“இந்திய புல்வெளிக்காடுகள் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் கொண்ட பகுதியாக உள்ளன. பல விலங்குகள் இந்த காடுகளில் வாழ்கின்றன. சுற்றுச்சூழல் அமைப்பில் ஓநாய்கள் உணவுச் சங்கிலியின் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. எனவே ஓநாய்களை பாதுகாப்பது முக்கியம் என்பதே வன ஆர்வர்லளின் வாதம்.
நாய்க்கும் ஓநாய்க்கும் மரபணு வித்தியாசங்கள் உள்ளன. மனிதர்களால் வளர்க்கப்படுவதால், நாய்களுக்கு ஓநாய் போன்ற குணங்கள் எதுவும் கிடையாது. நாய்கள் அளவு சிறியதாகி, அவற்றின் வலிமை குறைந்துவிட்டன. தற்போது ஓநாய் – நாய் கலப்பினம் ஏற்பட்டால், நாய்களின் குணங்கள் ஓநாய்களுக்குள் செல்லலாம்.
இது ஓநாய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லை. நாய்கள் மூலமாக ஓநாய்களுக்கு ரேபிஸ் உள்ளிட்ட வைரஸ்கள் பரவலாம். இந்த வைரஸ் ஓநாய்களுக்கு பரவும் போது அனைத்து காட்டு ஓநாய்களும் உயிரிழக்க கூடிய நிலை வரலாம் என்ற ஒரு திடுக் தகவலும் வன ஆர்வலர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.