இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி !

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி !

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8
சுற்றின் ஆறாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அமெரிக்கா அணியை 09 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்று கென்சிங்டன் ஓவல் பார்படாஸ் (Kensington Oval Barbados) மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி
19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை பதிவுசெய்தது.

அமெரிக்கா அணி சார்பில் துடுப்பாட்டத்தில் , ஆண்ட்ரிஸ் கௌஸ் (Andries Gous) 29 ஓட்டங்களையும் நிதீஷ் குமார் (Nitish Kumar) 20 ஓட்டங்களையும் மிலிந்த் குமார் (Milind Kumar) 19 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் (Roston Chase) மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் (Andre Russell) ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 10.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 130 ஓட்டங்களை பதிவு செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷாய் ஹோப் (Shai Hope) 82 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 27 ஓட்டங்களையும் ஜான்சன் சார்லஸ் (Johnson Charles)
15 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்துவீச்சில் அமெரிக்கா அணி சார்பில் ஹர்மீத் சிங் (Harmeet Singh) ஒரு விக்கெட்டை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )