ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று !

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று !

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வென்றுள்ளதுடன், அதன் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார அவற்றில் ஒன்றில் ஏற்கனவே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அதற்கமைய, எஞ்சிய 4 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான பெயர்கள் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம் மேற்கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )