ருத்ராட்சத்தை யார் எல்லாம் அணியலாம்
ருத்ராட்சம் பிறந்த கதை மிகவும் சுவாரசியமானது. திரிபுராசுரன் என்னும் அரக்கன் பிரம்மனிடம் பெற்ற வரத்தைக் கொண்டு தேவர்களை துன்புறுத்திக்கொண்டிருந்தான். தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை தீர்க்க தேவர்கள் கையிலாயம் சென்று சிவபெருமான வேண்டினர்.
உடனே, தேவர்களின் சக்தியை ஒன்றினைத்து, மிகப்பெரிய வல்லமை படைத்த அகோரம் என்னும் ஆயுதம் ஒன்றை உருவாக்கி அவனை அழித்தார். அப்போது சிவபெருமானுக்கு ஏற்பட்ட பேரிரக்கத்தால், தன்னுடைய மூன்று கண்களையும் மூடினார்.
பல ஆண்டுகள் மூடாமல் இருந்து மூடுவதால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்ச மரமாக மாறியது. அந்த ருத்ராட்ச மரத்தில் இருந்து விழுந்த பழம் தான் ருத்ராட்சம் ஆகும்.
மேலும் புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வியர்வை என்றும் சில புராணங்கள் சொல்கின்றன.
ஒன்று முதல் இருபத்தி ஏழு முகங்கள் கொண்ட ருத்ராட்சத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் யார் வேண்டுமானலும் அணியலாம்.
பெண்கள் அணிவதற்கு சில வரையறைகள் உள்ளன. அதை முறையாக பின்பற்றி அணிந்து கொள்வது நலம்.
ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
சிலரெல்லாம் போகம் செய்யும் போது அணியக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்திர உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணிய வேண்டும்.
அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.
ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய மாதவிடாய் நாட்களில் கூட அணியலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது.
வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.
இன்றைக்கும் தரமான, பழமை வாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இருக்கிறது.
சீரான ரத்த ஓட்டம், கால் மறத்துப் போதல் போன்றவற்றுக்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உடலுக்கு மினுமினுப்பைக் கொடுக்கும். ருத்ராட்சத்திற்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.