டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை

டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை

அரசு மற்றும் இராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதை உக்ரேன் அரசு தடை செய்துள்ளது.

ரஷ்யா-உக்ரேன் போர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரேனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரேன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

இந்நிலையில் சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் செயலி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன்மூலம் பயனர்களின் இரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரேன் இராணுவ புலனாய்வு துறை கூறியது.

எனவே அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )