ஏவுகணை சோதனை நடத்திய சீனா

ஏவுகணை சோதனை நடத்திய சீனா

சீன ராணுவம் பசிபிக் பெருங்கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும்(ICBM) எனும் ஏவுகணையை நேற்று(25) சோதனை செய்ததாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிலப்பரப்பை அடையக்கூடியது இந்த ஏவுகணை ஆயுத செயல்திறன் மற்றும் ராணுவ பயிற்சி திறனை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை சீன ராணுவம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அத்துடன் சர்வதேச சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மற்றும் எந்த நாட்டிற்கும் அல்லது இலக்கிற்கும் எதிராக சோதனை நடத்தப்படவில்லை என்றும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீப காலமாக ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் ஏவுகணை சோதனைகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவின் ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )