குற்ற புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக இமேஷா முத்துமால !

குற்ற புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக இமேஷா முத்துமால !

நாட்டின் பொலிஸ் வரலாற்றில் முதல் தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு,பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால இந்தப் பதவிக்கு முன்
மொழியப்பட்டுள்ளார்.

இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ள முதலாவது பெண் அதிகாரியும் இவர் ஆவார்.

பொலிஸ் வரலாற்றில் முதல் மூன்று பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர்களில், இமேஷா முத்துமாலயும் ஒருவராக உள்ளடங்குகிறார்.

இவர், 2007 நவம்பர் (03) பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக பணியில் சேர்ந்தார்.
பின்னர்,2017 மார்ச் 23 இல்,பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம்பெற்றவர் இவர்.திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜூனில் குற்றப்புலனாய்வுத் துறையின் பிரதிப்பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )