பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்
இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மூத்த பேராசிரியர் ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
திசபண்டார, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நிதித்துறை, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தில் நிதி மற்றும் நிறுவன ஆளுகைக்கான சிரேஷ்ட பேராசிரியராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.