2024-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இரு அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (08) இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு 2 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மனித மூளையைப் போல இயங்க கணினிக்கு கற்றுத்தரும் மெஷின் லேர்னிங் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோர் கூட்டாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )