முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு
அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “பெரும்பாலான மொத்த வியாபாரிகள் முட்டைகளை எடுத்துச் சென்று முட்டைகளை விற்பனை செய்தனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பாரிய நிவாரணம் கிடைத்தது.
தற்போது, உபரி உற்பத்தி பொருட்கள் சந்தையை விட்டு வெளியேறியுள்ளன. தற்போது உற்பத்தியாகும் தினசரி முட்டைகள்தான் சந்தைக்கு வருகின்றன.
ஆனால் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. இது செயற்கையாக நடக்கிறதா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் வெள்ளை நிற முட்டை ஒன்று 40-45 ரூபாவுக்கும் பழுப்பு நிற முட்டை ஒன்று 45-48 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது.