புளோரிடாவை கடக்கும் மில்டன் புயல்

புளோரிடாவை கடக்கும் மில்டன் புயல்

அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் மில்டன் புயல் உருவாகியுள்ளது.

இந்த புயல் இன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கரையை கடக்க உள்ளதால் அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழையும் பெய்யும் என கூறப்படுகிறது.

அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடக்கும் போது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டாம்பா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )