தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

தபால் வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

கடந்த ஜனாதிபதி தேர்தலை விட எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இத்தேர்தலில் 25,731 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.

இதேவேளை. பொதுத் தேர்தலுக்காக 738,050 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் அதிகளவான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

21 ஆயிரத்து 160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 23ஆம் திகதி தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகிக்கப்பதற்கு இம்மாதம் 26ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )