யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை

யமுனை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஆபத்தான வகையில் உள்ளளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் மோசமான காற்றின் தரவரிசையில் டெல்லி முதலிடத்தில் இருந்தது.

டெல்லியில் இத்தகைய மாசுபாடுகள் ஏற்படுவது தொடர்பாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது பாஜ.க கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.

இந் நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற பனிப்படலம்போல் ஆற்றின் மேல் மிதந்து செல்லும் ரசாயன நுரை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )