துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை மீளப்பெறுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகளை மீள பெறுவதற்கு முன்னதாக கடந்த 7ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசர முகாமில் உள்ள வணிகத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொள்முதல் பிரிவுக்கு கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதம் 06ஆம் திகதி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

தற்போது அனுமதிப்பத்திரம் பெற்ற நிலையில் வெளிநாட்டில் உள்ளவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பாதுகாப்பு அமைச்சிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை 21ஆம் திகதிவரை நீடிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், மேற்படி கால நீடிப்பு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அனுமதிபெற்ற அனைத்து உரிமையாளர்களுக்கும் எழுத்துமூலமாக முறையாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )