பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது

உயர்தரப் பரீட்சை பிள்ளைகளின் வாழ்வில் முக்கியமானதொரு பரீட்சை என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (25) காலை 8.30 மணிக்கு நாடளாவிய ரீதியில் 2,312 நிலையங்களில் ஆரம்பமாகி 22 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், உயர்தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நான்கு பரீட்சை பரீட்சார்த்திகள் தவித்ததாகவும் கடற்படை மற்றும் இராணுவத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.

இதன்படி, ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 177 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதோடு, பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் பரீட்சை தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள விரும்பினால் பாடசாலை பரீட்சை அமைப்புக் கிளையின் 0112 785 922 / 0112 784 537 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )