குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்களின் முழு விவரம்
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அந்த தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. 2023 ஐபிஎல் தொடரில் பைனல் வரை சென்று நூலிழையில் கோப்பையை தவறவிட்டு ரன்னர் அப் ஆனது.
அறிமுகமான முதல் 2 ஐபிஎல் தொடரிலும் பைனல் வரை சென்ற குஜராத் அணி கடந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. முதல் 2 ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா கடந்த சீசனில் மும்பை அணிக்கு சென்றதால் குஜராத் அணியை கடந்த சீசனில் சுப்மன் கில் வழிநடத்தினார்.
இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக விளையாட என்ற முனைப்போடு இருக்கும் குஜராத் அணி ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரஷித் கான் (ரூ. 18 கோடி), சுப்மன் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி) ஆகிய 5 வீரர்களை 51 கோடி கொடுத்து தக்க வைத்தது.
கையில் 69 கோடியுடன் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட குஜராத் அணி அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லரை 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அடுத்ததாக பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை 12.25 கோடிக்கும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடாவை 10.75 கோடிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை 9.50 கோடிக்கும் வாங்கியது.
வரும் ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் அணியின் ஓப்பனிங் பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் உடன் இணைந்து சுப்மன் கில் களமிறங்குவார். மிடில் ஆர்டரில் விளையாட சாய் சுதர்சன், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
ரஷித் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களும் ககிசோ ரபாடா, முகமது சிராஜ், ஜெரால்ட் கோட்சீ போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களும் குஜராத் அணியில் உள்ளனர்.
அதனால் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கண்டிப்பாக கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
25 பேர் கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி:
1. ரஷித் கான்
2. சுப்மன் கில்
3. சாய் சுதர்சன்
4. ராகுல் தெவாடியா
5. ஷாருக் கான்
6. ககிசோ ரபாடா,
7. ஜோஸ் பட்லர்
8. முகமது சிராஜ்
9. பிரசித் கிருஷ்ணா
10. நிஷாந்த் சிந்து
11. மஹிபால் லோம்ரோர்
12. குமார் குஷாக்ரா
13. அனுஜ் ராவத்
14. மானவ் சுதார்
15. வாஷிங்டன் சுந்தர்
16. ஜெரால்ட் கோட்சீ
17. குர்னூர் ப்ரார்
`18. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
19. சாய் கிஷோர்
20. இஷாந்த் சர்மா
21. ஜெயந்த் யாதவ்
22. க்ளென் பிலிப்ஸ்
23. கரீம் ஜனத்
24. குல்வந்த் கெஜ்ரோலியா
25. அர்ஷத் கான்