அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் பிராவோ

அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. இவர் 2021-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்தார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

24-ந் தேதி நடைபெற்ற போட்டியின் போது பிராவோவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் இதையடுத்து பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் பாதியில் வெளியேறினார். அதுதான் அவரது கடைசி போட்டி என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் பிராவோ ஓய்வு பெறுவதாக தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட், 164 ஒருநாள் போட்டி, 91 டி20 போட்டிகளில் விளையாடி 5293 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார் அப்போது ஆப்கானிஸ்தான் அணி யாரும் எதிர்பாராத வகையில் அரையிறுதி வரை முன்னேறியதால் இதற்கு முக்கிய காரணமாக பிராவோ பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )