IPL இறுதிப் போட்டி இன்று

IPL இறுதிப் போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (26) இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

முன்னதாக முதலாவது தகுதிகாண் சுற்றில் ஏற்கனவே குறித்த இரு அணிகளும் மோதியிருந்தன.

அதில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

குறித்த போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )