லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் ; இஸ்ரேலின் பங்கை ஒப்புக்கொண்ட நெதன்யாகு

லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் ; இஸ்ரேலின் பங்கை ஒப்புக்கொண்ட நெதன்யாகு

லெபனான் மற்றும் சிரியா முழுவதும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. அடுத்த நாளே அவர்கள் பயன்படுத்திய வாக்கி-டாக்கிகள் வெடித்துச் சிதறின.

இந்த ‘டிவைஸ் வெடிப்புத் தாக்குதல்’ சம்பவங்களில் 39 பேர் உயிரிழந்தனர். ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சதிச் செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் இராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத் துறை சார்பில் இருந்து எந்தவித விளக்கமும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதன்முறையாக, ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட பேஜர் மற்றும் வாக்கி-டாக்கிகள் தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஒப்புக்கொண்டார்,

பேஜர் நடவடிக்கை மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது ஆகியவை பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பொறுப்பானவர்களின் எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்டன என்று நெதன்யாகு கூறியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )