மன்னிப்பு கேட்ட நெதன்யாகு

மன்னிப்பு கேட்ட நெதன்யாகு

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். மேலும் பலர் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வரும் பலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே பேச்சு வார்த்தை மூலம் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இன்னும் ஹமாஸ் அமைப்பினரிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர்.

இதற்கிடையே காசாவில் உள்ள ஹமாசின் சுரங்கப் பாதையில் பிணைக்கைதிகள் 6 பேரின் உடல்களை இஸ்ரேல் இராணுவம் மீட்டது.

இதையடுத்து இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. பிணைக் கைதிகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண் ஸ்ரீடும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக பிரதமர் நெதன்யாகு கூறும்போது,

“6 பிணைக்கைதிகளையும் தலையின் பின்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் திரும்பக் கொண்டு வராததற்காக உங்களிடம் (மக்கள்) மன்னிப்பு கேட்கிறேன். இதற்கு ஹமாஸ் பெரும் விலை கொடுக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )