ஜப்பானிய தூதுவருக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

ஜப்பானிய தூதுவருக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஸ்சொமடோ அக்கியோவிற்கும் (Isomata Akio) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் மரியாதை நிமித்தமான சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, கடந்த காலங்களில் ஜப்பான் தூதரகம் மலையக மக்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது குறித்து செந்தில் தொண்டமான் நினைவூட்டியதுடன், தொடர்ந்தும் மலையக மக்களுக்காக வலுவான உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மேலும் புதிய ஜப்பான் தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில், மலையகத்திற்கு முதல் விஜயம் மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )