வாடகைக்கு காதலர்களை பிடிக்கும் பெண்கள்

வாடகைக்கு காதலர்களை பிடிக்கும் பெண்கள்

பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் எல்லாம் நடக்கணும்… வயது தாண்டி போக கூடாது என்று சொல்லி வயதிற்கு ஏற்றவாறு சடங்கு, சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வியட்நாம் பெண்கள் திருமணத்தின் அழுத்தத்தை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இளம்பெண்கள் தங்களுக்கு பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய நடைமுறை தான் தற்போது வியட்நாமில் நடைபெற்று வருகிறது.

திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர்கள் தொந்தரவு செய்வதால் தற்காலிகமாக அவர்களை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

வடக்கு வியட்நாமை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவருக்கு காதலனை வீட்டிற்கு அழைத்து வருமாறு பெற்றோர் வற்புறுத்தியதன் காரணமாக வாடகைக்கு காதலனை அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்தே இந்த நடைமுறை அறிமுகமாகி உள்ளது.

வாடகைக்கு சென்ற 25 வயதான நபர் கூறும்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக “போலி காதலனாக” வேலை செய்து வருகிறேன். தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜிம்மிற்குச் செல்வது, சமைக்கக் கற்றுக்கொள்வது மற்றும் பாடும் திறன் மற்றும் உரையாடல் திறன்களை மேம்படுத்துவது, தோற்றம் மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )