பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் விசேட சோதனை

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் விசேட சோதனை

பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களில் குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

மேலும் , அங்கு பாவனைக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

எதிர்வரும் வருடத்திலிருந்து குழந்தைகளுக்கு உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வாங்கும் போது, ​​பெற்றோர்கள் இது குறித்து மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கேட்டுக்கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )