சிறுத்தை தாக்கி பெண்ணொருவர் படுகாயம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லட்சுமி தோட்டம் 3ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரை சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்து மஸ்கெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டப்பகுதியில் அண்மைகாலமாக சிறுத்தை உலவுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுவரை குறித்த சிறுத்தை பிடிக்கப்படவில்லை என்றும் தேயிலை மலையில் சுற்றித்திரிவதாகவும் சிறுத்தையை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து வன வளத்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka