செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசியில் ‘செல்பி’ எடுக்க முற்பட்ட தாயும் மகளும் ரயில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நேற்று (22) நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு வந்த இவர்கள், அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேக ரயிலின் முன் கைத்தொலைபேசியில் ‘செல்பி’ எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இரத்தினபுரியைச் சேர்ந்த 37 வயதுடைய தாயும், 18 வயதுடைய மகளுமே உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )