காதலின் 6 நிலைகள்

காதலின் 6 நிலைகள்

காதல் மிகவும் அழகான ஒரு விடயம். காதலை வெவ்வேறு கட்டங்களாக நாம் பிரித்துக் கொள்ளலாம். இதில் ஒவ்வொரு கட்டமும்தான் வாழ்க்கையை அழகாக மாற்றுகின்றன.

காதலில் 6 நிலைகள் உள்ளன. நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால், உங்கள் காதல் எந்த நிலையில் உள்ளது என்பதை இதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மோக நிலை – எப்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற உந்துதல் இந்த நிலையில் இருக்கும். மனதுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதைப் போன்ற உணர்வும் படபடப்பும் ஏற்படும். இரு தரப்பினருக்குமிடையில் இருக்கும் குறைபாடுகள் தெரியாது. விரைவில் யதார்த்தம் அவர்களுக்கு புரிய வரும்.

கண்டறியும் நிலை – ஒருவருக்கொருவர் அவர்களது ஆளுமைகள், தனித்தன்மைகள் போன்றவற்றை மதிப்பாய்வு செய்யும் நிலை இது. இதன்போது கலந்துரையாடப்படும் உரையாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன.நம்பிக்கை மற்றும் நெருக்கத்துக்கான அடித்தளத்தை இந்தக் காலகட்டம் வளர்க்கின்றன.

அமைதியான காலகட்டம் – இந்தக் கட்டத்தில் வாழ்க்கையின் நடைமுறைகளை புரிந்து ஒன்றாக இணைந்து வாழத் தொடங்குவார்கள். எதிர்கால திட்டங்களை வகுத்து, வாழ்க்கை முறையை ஒன்றிணைப்பதற்கான சிக்கல்களை வழிநடத்துகிறது. இருப்பினும் ஆரம்பத்திலிருந்த உத்வேகம் குறைந்துவிடும்.

அதிகாரப் போராட்டத்துக்கான நிலை – இந்தக் கட்டத்தில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள், உறவுகளுக்குள் தனித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் போன்றவை மேலோங்குகிறது. நன்றாக பரீட்சயமானதன் பின்னர் உறவுகளுக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டத்தில் பிரிந்து விடுகின்றனர்.

ஆழ்ந்த நெருக்கமான நிலை – அதிகாரப் போராட்ட சோதனையின் பின்னர் இருவருக்குள்ளும் ஆழமான நெருக்கம் ஏற்படுகிறது. இப்போது தொடர்புகளை மேற்கொள்ளவும் தங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும் இந்தக் காலகட்டத்தில் கற்றுக்கொள்கிறார்கள். பல சோதனைகளை தாண்டுவதால் இருவருக்குள்ளும் நல்ல பிணைப்பு உருவாகிறது.

எல்லையற்ற காதல் நிலை – வாழ்க்கையில் ஐந்து நிலைகளை கடந்து வந்த காதல் ஜோடிகள் அர்ப்பணிப்பு, உருக்கமான தோழமை ஆகியவற்றில் வலிமையானவர்களாக மாறுகிறார்கள். இவர்களின் காதல் காலத்தைக் கடந்தும் நீடித்திருப்பதாக அமைகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )