லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத் தீ ; 30,000 பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத் தீ ; 30,000 பேர் வெளியேற்றம்

லாஸ் ஏஞ்சலீஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலீஸின் மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

தீயின் வேகம் அதிகமாகவும், பல கிலோ மீட்டருக்கு அப்பால் தீயின் வேகம் இருப்பதால் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மக்கள் தங்களது கார்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

10,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்துவந்த 26,000-க்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் லாஸ் ஏஞ்சலீஸ் தீயணைப்புத் துறையின் தலைவர் கிறிஸ்டின் குரோலி தெரிவித்தார்.

மிக மோசமான காற்று வீசக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பல மாதங்களாக மழை பெய்யாத பகுதிகள் மற்றும் மலையடிவாரங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவில் கடந்தாண்டு மே மாத தொடக்கத்தில் இருந்து 0.25 சென்டிமீட்டர்கூட மழை பெய்யவில்லை. இதனால், அமெரிக்காவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )