8 பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு

8 பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு

நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு குறைவான பாண்களை விற்பனை செய்ததாக காட்சிப்படுத்திய 8 பேக்கரி கடைகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (30) வழக்கு தாக்கல் செய்துள்ளது. 

கொழும்பு 2, கொழும்பு 9, கொழும்பு 5, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ ஆகிய இடங்களில் அமைந்துள்ள எட்டு தனியார் பேக்கரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி பிரதீப் களுஆராச்சி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் உத்தரவு எண் 93 க்கு முரணாக நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவான எடை கொண்ட பாண்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியதன் மூலம் சம்பந்தப்பட்ட கடைகள் தவறிழைத்துள்ளதாக குறிப்பிட்ட அதிகாரசபை நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த மார்ச் 27ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த கடைகளில் சோதனை நடத்தியது. முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பேக்கரி உற்பத்தியாளர்களை ஜூன் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )