இன்று வெளியாகிறது விடாமுயற்சி டிரெய்லர்
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “விடாமுயற்சி.” இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை வெளியிட முடியவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ‘விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற 23-ந்திகதி வெளியாக உள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. விடாமுயற்சி திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.