மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு
மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணம் சுமார் 20% குறைக்கப்பட வேண்டுமென்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையை அமைச்சு ஏற்றுக் கொள்வதாகவும், இதன்படி மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நேற்று(17) நள்ளிரவு 12:00 மணி முதல் குறைக்கப்பட்ட மின்சாரக் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டின் அனைத்து மக்களும், குறிப்பாக ஹோட்டல் துறையினரும், தொழிலதிபர்களும் பெரிதும் பயனடைவார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரக் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள இந்த குறிப்பிடத்தக்க குறைப்பு மக்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.