வெறும் 2 நிமிடத்தில் பீனட் பட்டர் செய்யலாம்
வேர்க்கடலை வெண்ணெயில் வைட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றை காலை உணவு முறையில் சேர்ப்பதால், வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தக்கூடும். இதனால், தேவையற்ற நேரங்களில் ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவது முற்றிலும் குறையக்கூடும்.
வேர்க்கடலை வெண்ணெயில் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளது. அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திட உதவக்கூடும்.
இதில் நார்ச்சத்து உள்ளடக்கம் அதிகமாகவே உள்ளது. அவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமின்றி குடல் இயக்கத்தையும் மேம்படுத்தக்கூடும்.
இதனால், மலச்சிக்கல் அபாயம் முற்றிலும் குறையக்கூடும். புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காம்பினேஷன், உடலுக்கு நிலையான ஆற்றலை தரக்கூடும். இதனால், பிற பணிகளில் எவ்வித சோர்வும் இன்றி கவனத்தை செலுத்த முடியும்.
இவ்வளவு நன்மைகள் தரக்கூடிய பீனட் பட்டரை (வேர்க்கடலை வெண்ணெய்) 2 நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம். வாங்க பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை- 1 கப்
சமையல் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு
2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை (உங்கள் சுவை விருப்பத்திற்கு ஏற்ப)
முதலில் மிக்சியில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். மென்மையான, கிரீமி பதத்திற்கு வரும் வரை அரைக்கவும். கட்டியாக இருந்தால் எண்ணெயை சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் அரைத்தால் பீனட் பட்டர் ரெடி. இதனை ஒரு ஜாரில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.