வடக்கு காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் பலி : நெதன்யாகு அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் !

வடக்கு காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் பலி : நெதன்யாகு அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் !

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 50க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட நிலையில் இடிபாடுகளில் புதையுண்ட உடல்களை மீட்பதில் மீட்பாளர்கள் போராடி வருகின்றனர்.

காசாவின் தெற்கு நகரான ரபா உட்பட பிற பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

வடக்கு காசாவில் உள்ள காசா நகரிலேயே இஸ்ரேலின் தாக்குதல்கள்
தீவிரம் அடைந்திருப்பதாக காசா அரச ஊடக அலுவலகத்தின் பணிப்பாளர் இஸ்மைல் அல் தவப்தா தெரிவித்துள்ளார்.

காசாவில் இருக்கும் எட்டு வரலாற்று அகதி முகாம்களில் ஒன்றான
அல் சட்டியில் உள்ள வீடுகள் மீது இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 24
பேர் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அல் துவப்பா பகுதியில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட மற்றொரு
தாக்குதலில் மேலும் 18 பேர் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் படைத் தளங்கள் இரண்டின் மீது
போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம்
வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை காசா நகரில் அல்சப்ரா பகுதியில் வீடு ஒன்றின் மீது
இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் கயமடைந்ததாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஆக்கிரமிப்பு போர் விமானங்கள் மத்திய காசாவின் நுஸைரத் அகதி
முகாமில் பலஸ்தீனர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதி
யில் இஸ்ரேலிய பீரங்கிகள் சரமாரி தாக்குதல்களை நடத்தியதாகவும் அங்குள்ள பிரேசில் பகுதியில் பல வீடுகளையும் இஸ்ரேலிய படை குண்டு வைத்து தகர்த்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் எட்டு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேலின் தாக்குதல்கள்
இடைவிடாது தொடரும் நிலையில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் 37,500ஐ தாண்டியுள்ளதோடு காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 86,000ஐ நெருங்கியுள்ளது.

காசாவில் தொடரும் போர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்
யாகு அரசுக்கு இஸ்ரேலுக்குள் அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் மிகப்பெரிய நகரான டெல் அவிவில் கடந்த சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய தேசியக் கொடியுடன் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோசம்எழுப்பினர்.

காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலியர்களை
மீட்பது மற்றும் இஸ்ரேலில் புதிய தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இதில் பல ஆர்ப்பாட்டக்காரர்களும் ‘குற்றவாளிப் பிரதமர்’ மற்றும்
‘போரை நிறுத்து’ என்ற பதாகைகளை சுமந்திருந்தனர்.

‘எனது பேரக் குழுந்தைகளின் எதிர்காலம் பற்றிய பயத்தினாலேயே
நான் இங்கு வந்திருக்கிறேன். நாம் வெளியே வந்து இந்தபயங்கர அரசை வெளியேற்றாத பட்சத்தில் அவர்களுக்கு எதிர்காலம் ஒன்று இருக்காது’ என போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி
ஜோ பைடன் முன்வைத்த திட்டம் ஒன்று ஐ.நா. பாதுகாப்புச் சபையி லும் அங்கீகாரம் பெற்றது.

இதற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.

எனினும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்
பெற்று வருவதாக கட்டார் பிரதமர் அல்தானி தெரிவித்துள்ளார்.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் பிராந்தியத்தில் வன்
முறைகள் பரவுவதை தடுப்பதற்கும் பிராந்திய மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் இணைந்து தமது அரசு தொடர்ந்து முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய தாக்குதல் ஒன்றில் இஸ்லாமியவாத தளபதி ஒருவர்
கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பதிலடியாக ஆளில்லா விமானம்
மூலம் வடக்கு இஸ்ரேலில் இராணுவ நிலை ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக லெபனானின்ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று தெரிவித்தது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்
கம் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே கிட்டத்தட்ட தினசரி பரஸ்
பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் லெபானனின் கிழக்கு பக்கா பகுதியில் இஸ்ரேல்
கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதல் ஒன்றில் ஜமா இஸ்மைலியா
குழுவின் தளபதிகளில் ஒருவரான ஐமன் கொட்மா கொல்லப்பட்டாக
அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேலுடன் முழு அளவில் போர் வெடித்தால் ஹிஸ்
புல்லாவுடன் இணைவதற்கு மத்திய கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான
ஈரான் ஆதரவு குழுக்களின் போராளிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக செங்கடலில் செல்லும்
இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது யெமன் ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஹூத்திக்களால் அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆளில்லா விமானம் ஒன்று நேற்று செங்கடலில் உள்ள கப்பல் ஒன்றை தாக்கி சேதப்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹூத்திக்களின் தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் அமெரிக்கா
அனுப்பிய யு.எஸ்.எஸ். டிவைட் டி. ஐசன்ஹோவர் கப்பல் எட்டு மாதங்
கள் செங்கடல் புகுதியில் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து திரும்பிய
நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹுதைதா துறைமுக நகர
கடற்கரைக்கு அப்பால் இருந்து அதிகாலையில் அனுப்பப்பட்ட
ஆளில்லா விமானமே இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக பிரிட்டன் இராணுவத்தின் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதில் கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டபோதும் அங்கிருப்பவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூத்திக்களின் இந்தத் தாக்குதல்களால் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கான கப்பல் பாதையில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )