3 பாராளுமன்ற குழு தலைவர்கள் தெரிவு
பாராளுமன்றத்தின் வழிவகைகள் தொடர்பான குழுவின் புதிய தலைவராக பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவு செய்யப்பட்டதோடு, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் புதிய தலைவராக அமைச்சர் கிறிஷாந்த அபேசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொது மனுக்கள் மீதான குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.காமினி ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில் கூடிய அந்தந்த குழுக்களின் முதலாவது கூட்டத்திலேயே புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.