தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.
தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜா உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில், மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவரது இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று மதியம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.