
மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெலும்வெவ பிரதேசத்தில் நேற்று (06) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.
நெலும்வெவ, சமகிபுர பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் சுகயீனமுற்றிருந்த தாய்க்கு மதிய உணவு வழங்குவதற்காக வீட்டுக்குச் சென்ற தந்தை வீட்டுக்குள் நாய்கள் புகுவதைத் தடுப்பதற்காக வீட்டினுள் சென்ற போது சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka