என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா… மனைவி தாய் வீட்டுக்கு சென்றதை கொண்டாடிய நபர்

என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா… மனைவி தாய் வீட்டுக்கு சென்றதை கொண்டாடிய நபர்

பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ சாரதி ஒருவர், தனது மனைவி, அவரது தாய் வீட்டுக்கு சென்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.

தனது மனைவி தாய் வீட்டுக்கு சென்றதற்காக தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக பிஸ்கட் வினியோகித்துள்ளார். அத்துடன் மனைவி தாய் வீட்டுக்கு சென்றது தொடர்பாக கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ‘எனது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றதால் நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்’ என எழுதி ஆட்டோவில் தனது இருக்கையின் பின்புறம் ஒட்டி வைத்துள்ளார்.

அருகில் ஒரு ஸ்டேன்ட் வைத்து கிரீம் பிஸ்கட் பாக்கெட்டையும் வைத்துள்ளார். இதை ஒரு பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டாபெங்களூரு ஆட்டோ டிரைவரின் இந்த செயல் குறித்த பதிவு வைரலாகி ருசிகரமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

பெரும்பாலான நெட்டிசன்கள் இது தான் உண்மையான சுதந்திரம் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சிலர் ஒருபடி மேலே போய், சுதந்திர தின வாழ்த்துகள் எனவும் கருத்து கூறினர். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த செயல் மூலம் நீங்கள் உங்கள் மனைவியின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டீர்கள் என கண்டன கருத்துகளையும் கூறியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )