
பாடசாலை அருகே துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி
மினுவங்கொடையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.