2024 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவன் 188 புள்ளிகளை பெற்றுள்ளார்
2024 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன் 188 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக மேலும் 17 சிறுவர்கள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு.அமித் ஜயசுந்தர தெரிவித்தார். அவர்கள் 187 மற்றும் 186 புள்ளிகள் வரம்பில் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.