மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய திரவுபதி முர்மு

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய திரவுபதி முர்மு

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் திகதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்

உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (10) பங்கேற்கிறார். இதற்காக பிரயாக்ராஜ் சென்ற ஜனாதிபதி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

இத்துடன் பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொள்வார் என ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி கடந்த வாரம் மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )