
போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசியவருக்கு அபராதம்
பிரான்ஸ் நாட்டின் நான்டெஸில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் தனது செல்போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசியதற்காக டேவிட் என்ற நபருக்கு 207 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ரெயில் நிலையத்தில் டேவிட் தனது சகோதரியுடன் போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது ரெயில்வே அதிகாரி ஒருவர் அவரிடம் வந்து ஸ்பீக்கரை ஆப் செய்யாவிட்டால் 154 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ரெயில்வே அதிகாரி கிண்டலடிக்கிறார் என்று டேவிட் அப்போது நினைத்துள்ளார். ஆனால் டேவிட் அதன்பின்னும் ஸ்பீக்கரை ஆப் செய்யாததால் அவருக்கு 207 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
CATEGORIES World News