பாராளுமன்றம் கலைப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் ( Emmanuel Macron) அந்த நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி பிரான்ஸில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் (09) நிறைவடைந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தேர்தலின் ஆரம்பகட்ட முடிவுகளுக்கு அமைய, மத்திய வலதுசாரி ஐரோப்பிய மக்கள் கட்சி அதன் பெரும்பான்மையைப் பலப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த 4 நாட்களாக பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்புகள் இடம்பெற்றன.
இத்தாலி, ஆஸ்திரியா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளில் வலதுசாரி கட்சி முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் தாராளவாத கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
CATEGORIES World News