
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பானஅறிவிப்பு
இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சன்ன குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
லிட்ரோ உள்நாட்டு எரிவாயு விலை (கொழும்பு மாவட்டத்திற்கு தொடர்புடையது) கீழே காட்டப்பட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690.
5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482.
2.3 கிலோ கிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694.