சிசிரிவி காணொளியால் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

சிசிரிவி காணொளியால் சிக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவை துப்பாக்கியுடன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

குறித்த கான்ஸ்டபிள் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் கலபிடமட பகுதியைச் சேர்ந்த மிலான் கேசர சமரதுங்க என்ற நபராவார். 

பொலிஸ் நிலையத்திலிருந்து தனது கடமை துப்பாக்கியுடன் வெளியேறிய கான்ஸ்டபிள், வெளிநாட்டு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்ல மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இருப்பினும், மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், இன்று கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் அந்த இடத்திற்குச் சென்று மோட்டார் சைக்கிளை மீட்டெடுப்பது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. 

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிள் வெளிநாடு செல்வதற்கு முன்பு, சந்தேக நபர் அவருக்கு நான்கு முறை தொலைபேசி அழைப்பு விடுத்து அவர் இருக்கும் இடம் குறித்து விசாரித்ததாக பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, கல்கிஸ்ஸ நீதவான் ஏ. டி. சதுரிகா சில்வா சந்தேக நபரை பெப்ரவரி 13 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க , கல்கிசை பொலிஸச தலைமையகத்திற்கு அனுமதி வழங்கினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )