அமைச்சர் சந்திரசேகரின் திடீர் கள விஜயம்

அமைச்சர் சந்திரசேகரின் திடீர் கள விஜயம்

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று (11.02.2025) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.

மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

மேற்படி திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் முறையாக இடம்பெறுகின்றனவா, சேவைகளை வழங்குவதில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எவ்வாறான வளங்கள் தேவை, மீனவர்களின் தரவுகள் என்பன பற்றி அமைச்சர் கேட்டறிந்தார்.

அத்துடன்,  இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட படகுகளின் நிலை பற்றியும் அமைச்சர் இதன்போது அவதானம் செலுத்தினார்.

அரசாங்கம் மூலம் மீனவர்களுக்கென வழங்கப்படும் நிவாரணங்களை எவ்வித தடையுமின்றி உரியவகையில் பெற்றுக்கொள்வதற்குரிய சூழ்நிலை உள்ளதா என்பது பற்றியும் அமைச்சர், அதிகாரிகளிடம் வினவினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )